திங்கள், 12 ஏப்ரல், 2021

வாழைப்பாட்டு ---கி.வா.ஜ

 

"பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்"

 

தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.

ஒரு முறை கி.வா.-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும்சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.

கி,வா.. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்துஎன்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படிவருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையானவைத் தம்மிடத்தில் உடையதுதமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமாஎன்கிறார்.

உடனே கி.வா.., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்யாமா மாநீ யாமா மாஎன்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால், அரை,கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.

 அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், “முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.

மேலும்என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!




சனி, 3 ஏப்ரல், 2021

ஒன்றே ஒன்று ---கி.வா.ஜ

 

                                                                    DOWNLOAD  PDFhttps://drive.google.com/file/d/16n50OsEKwAb2niW27YgoJO5ElrqQ74WS/view?usp=sharing   CLICK

சிலம்பு பிறந்த கதை--கி. வா. ஜ

 

                                                                        DOWNLOAD  PDFhttps://drive.google.com/file/d/1sIShakd2Jb6mALze_3eVNJGXtFoV4HVq/view?usp=sharing  CLICK

குமண வள்ளல்-- கி.வா.ஜ--

 

                                                                    DOWNLOAD  PDFhttps://drive.google.com/file/d/10oREYzOjRwsK4uAQ54ZY0AGAUpLduKpY/view?usp=sharing CLICK


என் ஆசிரியப் பிரான் --கி.வா.ஜ-

 

                                                                        DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1fKgGtrHWKvegyB_SyPjsFW45p561elLO/view?usp=sharing     CLICK

ஆத்மஜோதி--கி.வா.ஜ

 


                                                                    DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1QmtEs2Gd6V74Ip1ctoiv7dpH139GdbfI/view?usp=sharing   CLICK


வெள்ளி, 2 ஏப்ரல், 2021

அப்பர் தேவார அமுது--கி.வா.ஜ

 


                                                                      DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1R5Q94JYsc66ZbvO5QZUZeLnXlKXMbO5f/view?usp=sharing CLICK

ஆரம்ப அரசியல் நூல்--கி.வா.ஜ

https://drive.google.com/file/d/1v0anzf3Q-xc9L7rBqzaSx-k0wMK8zmTM/view?usp=sharing 

                                                                        DOWNLOAD PDF

PRESS THE LINK

அறுந்த தந்தி--கி.வா.ஜ

 


                                                                      DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1hgxIJkt1dMZ2AyQnJLlqEA9QGF1hz-Si/view?usp=sharing      PRESS THE LINK   --- CLICK

அபிராமி அந்தாதி--கி.வாஜ

 

        

                                                                         DOWNLOAD PFDhttps://drive.google.com/file/d/1QN1bn1LCJSrXX6WjLtkcr-YSEUxQ0b_z/view?usp=sharing

PRESS THE LINK

வியாழன், 1 ஏப்ரல், 2021

அமுத இலக்கியக் கதைகள்--கி.வா.ஜ

 


                                                                 DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1wzU9RdKWiXG3np77-Go1nenTD2BSVCZz/view?usp=sharing

                        PRESS THE LINK

அதிசயப் பெண்--கி.வா.ஜ

 

                                                        

                                                               DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/11E68ROA0Uq9Pn8FfT0H9hNe8LOmdY7rx/view?usp=sharing

                PRESS THE LINK

அன்பு மாலை--கி.வா.ஜ

 

                                                                DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1zArxhzi6nPLC26H-cU_kvBE5dPvy6-X4/view?usp=sharing

   PRESS THE LINK

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

 

                                                                DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1RyynouMHSrPbC23RNsOcGYU6y8s8sRER/view?usp=sharing

கி.வா.ஜ.சிலேடைகள்

 


                                                            DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1brhOK6ZBMMExvlnf0-SQtgiVvR--sXv8/view?usp=sharing

கஞ்சியிலும் இன்பம் ---கி.வா.ஜ

https://drive.google.com/file/d/1d6fJt2_a32EMHXkZ4skNU_HLr7Hhui5C/view?usp=sharing 

                        

                                                                     DOWNLOAD PDF

இரத்னகிரி பாலமுருகன் அந்தாதி--கி.வா.ஜ

 

                                                                DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1zZ4cS_2KvuGrYECANTYu79ZnIvSOFnSb/view?usp=sharing

அழியா அழகு ---கி.வா.ஜ

 

                                                                DOWNLOAD PDF

      https://drive.google.com/file/d/1Tz8DAfRXTnnz2L2DGS65e_d_2SV1a-tX/view?usp=sharing

சகலகலாவல்லி-- கிவா.ஜ

 


                                                                    DOWNLOAD PDF

https://drive.google.com/file/d/1a0kYnQwnaqebW_1lcWrgxtpbZSyPN1me/view?usp=sharing

பயப்படாதீர்கள்--- கி.வா.ஜ

 

                                                                    

                                                                        DOWNLOAD PDFhttps://drive.google.com/file/d/1CYG9VjMNbOxxSAezFGpbiobJzePhPSNc/view?usp=sharing

வியாழன், 25 மார்ச், 2021

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ--கதைகள்-பாண்டியன் நெடுஞ்செழியன்

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ-- ருசி கண்ட பூனை

வாகீசகலாநிதி திரு கி.வா.ஜ---கதைகள்---மந்திரப்பெட்டி

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ--கதைகள் -இட்லியும் மிளகாய்ப் பொடியும்

வாகீசகலாநிதி கி.வா.ஜ.--கதைகள் -மிட்டாய்காரன்

புதன், 24 மார்ச், 2021

வாகீசகலாநிதி திரு கி.வா.ஜ- கதைகள்-அரிசில் கிழார்

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ -கதைகள்- கபிலர்

வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ --கதைகள்- சீத்தலை சாத்தனார்

வாகீசகலாநிதி திரு கி.வா.ஜ--கதைகள்-- ஔவையார்

செவ்வாய், 23 மார்ச், 2021

தமிழ் வளர்த்த சான்றோர் --திரு கி.வா.ஜ

சாகித்ய அகாடமி பரிசு --- வீரர் உலகம் --திரு கி.வா.ஜ

கி.வா.ஜ கதைகள்

 கி.வா.ஜ சிலேடைகளின் அழகு


நடைப் பிசகு

ஒரு கோயிலுக்கு அன்பர்களுடன் புறப்பட்டார் இவர். "டாக்ஸியில் போவோம்; இல்லாவிட்டால் ரிக்ஷாவில்

போவோம்' என்றார்கள் அன்பர்கள். வேண்டாம் ; நடந்தே போகலாம்' என்றார் இவர். நாங்கள் நடப் போம். உங்களால் நடக்க முடியுமா?' என்று அன்பர்கள் கேட்டார்கள். உங்களுக்கு நடைப்பலம் உண்டு. எனக்கு நடைப்பலம் இல்லையா? நடைப்பிசகு எ ன் னி ட ம் இல்லையே!' என்று இவர் சொன்னவுடன் யாவருமே. நடக்கலானார்கள். - -

பழநண்பர்

புதியதாக ஊரிலிருந்து ஒரு ந ண் ப ர் இவரைப் பார்க்க வந்தார். நிறையப் பழங்களை வாங்கி வந்தார். நீங்கள் புதிய நண்பர். ஆனாலும் இவற்றைப் பார்க்கும் போது பழ நண்பர் என்று தோன்றுகிறது' என்றார் இவர்.

 கலையாமகள்

தினமணி - கதிரில் அன்பர்கள் இவரைக் கேட்ட கேள்விகளுக்குரிய விடைகளை எழுதி வெளியிட்டார். ஓர் அன்பர், 'க ைல ம க ள் நேரில் பிரத்தியட்சமானால் அவளுடன் சிலேடையாகச் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டிருந்தார். இவர், கலையா மகளே, என்னிடம் கலையா மகளாய் இரு என்பேன்" என்றார். - . * .

(கலையாமகள்-கலை ஆம் மகள், கலையாத மகள்.)

இப்பொழுதே இடம்

திருவல்லிக்கேணியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு வலப்பக்கம் மணமகள் அமர்ந்திருந்தாள், ! பொரியிடும்போது புரோகிதர் பெண்ணை மணமகனுக்கு இடப்பக்கமாக வந்து அமரச் சொன்னார். அவள் அமர வாகாக மணமகன் சற்றே நகர்ந்தான். இவர், "இப்போதே இடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்' என்றார்.

 முன்னேற்றம்

அன்பர்கள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லக் காருடன் வந்திருந்தார்கள். ஒருவர், ஐயா, நீங்கள் முன்னேறுங்கள்' என்று சிலேடையாகச் சொன்னார். இவர் உடனே, "தெரியும். தெரியும், உங்கள் திருட்டுத் தனம்! நான் உங்களுக்குப் புறங்காட்ட வேண்டும் என்பது உங்கள் ஆசை” என்று கூறிச் சிரிக்க வைத்தார்.

கனியும் காயும்

டில்லி மாநகரில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் கி. வா. ஜ. ஒரு பரிசு பெற்றார். அப்போது இவருடன் சில நண்பர்களும் இருந்தார்கள். தமிழிசை மணி ஆதிசேவுையர் என்னும் சாகித்தியர் கர்த்தா அவர்களில் ஒருவர். அவரும் இவரும் ஓர் அன்பர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே முற்றத்தில் தேங்காய்த் துண்டுகளைத் தனியாகவும் அதற்கு அருகில் மிளகாய்ப் பழத்தைத் தனியாகவும் உலர்த்தியிருந் தார்கள். ஆதிசேஷையர் தேங்காயை எடுத்து வாயில், போட்டுக் கொண்டார். கண்ட இவர், பழம் இருக்கக் காயைத் தின்கிறீர்களே; கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளின்படி யிருக்கிறீர்களே!' என்றார். -

ரசமும் பதமும்

ஒரு வைணவர் இவரைத் தம் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். வைணவர்கள் ரசத்தைச் சாற்றமுது என்று தான் சொல்வார்கள். ஆகவே இவர், 'உங்கள் வீட்டில் ரசம் இல்லாத சாப்பாடல்லவா?' என்றார். 'என்ன அப். படிச் சொல்கிறீர்கள்: சாற்றமுது உண்டே' என்றார்

'சாற்றமுதுதானே? ரசம் இல்லையே?” 'பதத்தானே இல்லை'

 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

பின்பற்றுகிறவள்

அவர் ஸ்கூட்டர் வாங்கியிருந்தார். வெளியில் போகும் போது தம் பின்னாலே தம் மனைவியையும் அமரச்செய்து அழைத்துக் கொண்டு போவார். ஒரு நாள் அவர் வீட்டுக்கு இவர் போயிருந்தார். 'உங்கள் வீட்டில் உங்கள் கருத்து மேலோங்கி நிற்குமா? அல்லது உ ங் க ள் ம ைன வி கை ஓங்குமா? இல்லை, சமமாக இருக்குமா?' என்று கேட்டார். அவர், 'என் விருப்பப்படியே இவள் செய்வாள்' என்றார். அப்படியா! உங்கள் மனைவி அகத்தும் புறத்தும் உங்களைப் பின்பற்றுகிறவள்!' என்றார். எப்படி?” என்று கேட்டார் நண்பர். ஸ்கூட்டரில் போகும்போது பார்த்திருக்கிறேன்' என்று விளக்கம் தந்தார். இவர்.

வெற்றிலை

குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசிக் கொண்டி ருப்பார், இவர். அவர்களுக்குக் கதை சொல்வார். புதிர் போடுவார். வேடிக்கைக் கணக்குப் போடுவார். விசித் திரமான கேள்விகளைக் கேட்டார். ஒரு முறை சில குழந்தை களிடம் இவர், 'வெற்றிலைய்ை எப்போது போடு வார்கள்?' என்று கேட்டார். 'சாப்பிட்டபிறகு' என் றார்கள் குழந்தைகள். "எங்கே?' என்று இவர் கேட்டார். வாயில்' என்றார்கள். 'வாயிலும் போடுவார்கள்: வாயிலிலும் போடுவார்கள். தாம்பூலத்தில் உள்ள வெற்றி லையை வாயில்போடுவார்கள். சாப்பிட்டு மிஞ்சிய வெற்று இலையை வாசலில் போடுவார்கள் அதைத்தான் வாயிலில் போடுவார்கள்' என்று இவர் விளக்கியபோது, குழந்தைகள் ஒரே குரலில், கரெக்ட்' என்று கூவினார்கள்.

 கி.வா.ஜ.வின் சிலேடைகள் 5i

அச்சில் இட்டார்

ஒரு புத்தக வெளியீட்டின்போது இவர் பேசினார் : அருமையான கருத்துக்களை இனிமையான நடையில் எழுதியிருக்கிறார் இந்த ஆசிரியர். பாகு போல் இனிக்கும் அவற்றை எல்லோரும் ஏற்றுப் பயன் அடையும்படி அச்சிட்டிருக்கிறார். பாகை அச் சாக் கி னால் தானே எல்லோரும் பெற்றுப் பயனடையலாம்? (அச்சு:வெல்ல அச்சு, புத்தக அச்சு.)

பலகை வேண்டாம்

நண்பர் வீ ட் டி ல் விருந்துண்ணச் சென்ற போது இவருக்கு மாத்திரம் ஒரு பலகையைக் கொண்டுவந்துபோட் டார்கள். மற்றவர்களுக்குப் பலகை இல்லாதது கண்டு இவர், ' .வேண் டாம் ' என்றார். பரவாயில்லை; உட்காருங்கள்' என்று நண்பர் சொன்னார். 'இரண்டு கை இருந்தும் சாப்பிடும்போது ஒரு கைதானே உபயோகப் படுகிறது? பலகை எதற்கு?' என்றார். இவர். (பலகைஅமரும் பலகை, பல கைகள்.)

நாற்காலி மனிதர்

கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை. இவரைத் தலைமை தாங்கச் சொன்னார்கள். இவர்

மறுத்தார். "நீ ங் க ளே தலைவராக அமர வேண்டும்' என்றார்கள் அன்பர்கள். 'இரண்டு கால் மனிதனை நாற் காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை?' என்று கேட்டார் இவர். o

 சிலேடைகள் அழகு

கரு டர்

திருப்பூரில் பேசப் ப்ோயிருந்தபோது திருப்பணி நடந்து கொண்டிருந்த பெருமாள் கோவிலுக்கு அன்பர்கள் அழைத்துச் சென்றார்கள். சுவர்கள் எழும்பியிருந்தன. மேல் தளம் போடவில்லை. 'ஏன் இன்னும் மேலே கட்ட வில்லை?” என்று கேட்டார் இவர். 'கருடர் கிடைக்க வில்லை' என்றார் அ ன் பர். இவர் கேட்ட கேள்வி: 'பெருமாளுக்குக் கருடர் கிடைக்கவில்லையா? ஆச்சரியந் தான்!” (கருடர்-உத்தரம், கருட பகவான்.)

பல்கலைக் கழகமும் டிகிரியும்

அத்துக்குடியில் இருபது நாள் கந்தபுராணச் சொற். பொழிவு ஆற்றினார். இவர் வ. உ. சி. கல்லூரிப்: பேராசிரியர் ஒருவர் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்திருந்தார். அங்கெல்லாம் வெயில் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார் இவர்.

"திருச்சியைவிட மதுரையில் வெயில் அதிகம். இரண்டு

டிகிரி கூடவே இருக்கிறது.'

பல்கலைக் கழகம் இருக்கிறதல்லவா?"

(டிகிரி-வெப்ப அளவு, பட்டம்.)

 http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-92.htm

கம்பனும் கி.வா.ஜவும்

மஹா பெரியவாளும் கி.வாஜ வும்

கரிகால் வளவன்

கி.வா.ஜ பற்றி ஞான சம்பந்தம்

சிலேடைகள்

 


சைதாப்பேட்டை முருகன் கோவில்


திங்கள், 22 மார்ச், 2021

 

குண்டோதரனுக்கு   அன்னமிட்டது    (  கி.வா.ஜ )

 

அங்கயற்கண்ணி  யம்மையின்   திருமணத்திற்கு   வந்தவர்களுக்கெல்லாம்  அறுசுவை   உண்டி  வழங்கினர் . யாவரும்  வயிறார உண்டு   மகிழ்ந்தனர். அப்போது   சமயர்காரர்கள்    மீனாட்சியிடம்  வந்து , “அன்னையே   நாங்கள்   சமைத்த விருந்துணவில்   ஆயிரத்தில்  ஒரு  பகுதிகூடச்   செலவாகவில்லையே ?  இன்னும்   மலை   மலையாக  எல்லாம்  மிஞ்சியிருக்கின்றன.    என்று  கூறினார்கள்.

  அதைக்   கேட்ட  அன்னை   தன்  கணவரை  அடைந்து   பணிந்து ஒதுங்கி   நின்று   மெல்லக்   கூறலானாள். “   சுவமி !, தேவரீர்   முப்பத்து  முக்கோடி   கணங்களுடனும் எழுந்தருள்வீர்கள்     என்ற  எண்ணத்தால்  விருந்து   சமைத்திருக்கிறார்கள். திருமணத்துக்கு   வந்தவர்கள்   யாவரும்   உண்ட பிறகும்   இமய  மலையைப்  போலச்   சோறும்  ,  மற்ற  மலைகளைப்  போல   ஏனைய   உணவு   வகைகளும்     மிஞ்சி  இருக்கின்றன. ”  என்றார்,

   எம்பெருமான்  சிறிதே   புன்னகை  பூத்தான் . பிறகு ,  “ முடியுடை   மூவேந்தர்களினும்   சிறந்த  பாண்டியனுடைய    மகளாகிய   உனக்குக்   கிடைப்பதற்கு   அரிய  பொருள்  என்ன இருக்கிறது ? தேவலோகத்துக்   கற்பகமும்  உன்னுடைய  ஏவலுக்கு   அடங்கி   இங்கே   இருக்கிறது . நின்   செல்வச்   சிறப்பை   நாம் அறியும்  பொருட்டு இவ்வளவு   மிகுதியான  உணவைச்   சமைக்கச்   செய்தனை   போலும் !. இன்னும்   உண்ணுவதற்கு உரிய   பசியுடையவராக  யாரும்  என்னுடன்  வந்த  கணங்களில்   இல்லை . இதற்கு  என்ன  செய்வது ? ”   என்றான் .

  இப்படிச்  சொன்னவன்  அருகில்   தனக்குக்  குடை  பிடித்துக்   கொண்டிருந்த பூத  கணத்தைச்   சேர்ந்தவனாகிய  குண்டோதரன்   வயிற்றில்   பெருந்தீயைப்  புகச்  செய்தான் . அதனால்  மிகவும்  வருந்திய  அவன் , “ ஐயனே   எனக்குப்  பசிக்கிறது . ” என்று  சொன்னான் .

    இறைவன்   உடனே   மீனாட்சியைப்   பார்த்து , “  இவனுக்குப்   பசிக்கிறதாம் , இவனுக்கு   ஒருபிடி  சோறு   போடுங்கள். பிறகு    செய்வதை   அப்பால்   சொல்கிறோம்”      என்று   சொல்ல ,பிராட்டி குண்டோதரனை   அழைத்துக்  கொண்டு   செல்லும்படி     ஏவலரைப்  பணித்தாள். அவன்  கடும் பசியுடன்   நடை   தளர்ந்து , கண்  புகைந்து  வாய்   புலர   அவர்களுடன் சென்றான். ஏவலாளர்கள்   அவனைக்  கொண்டு போய்ச்   சோற்று   மலையின்  முன்  விட்டார்கள். அங்கே   அவன்  உட்கார்ந்ததுதான் , அடுத்த  கணத்தில்   அங்கே   இருந்த  அவ்வளவு   பெரிய  அன்னக்   குவியலும்   இருந்த  இடம்  தெரியாமல்  போய்விட்டது.

 

 

இதைக்   கண்டு   யாவரும்   ஆச்சரியப்பட்டுப்   போயினர். மகளிர்   அஞ்சி   ஓடினர். குண்டோதரன்  சோற்றை   உண்டதோடு   அங்குள்ள  கறி,  கூட்டு , வறுவல்  ,  குழம்பு   எல்லாவற்றையும்  அப்படியப்படியே   எடுத்து  வாயில்   கவிழ்த்துக்   கொண்டான். பால்,   தயிர்  , நெய்   முதலியவற்றையும்   எடுத்து   விழுங்கினான் . அப்பொழுதும்    அவன் பசி   தீரவில்லை . அங்கே   குவித்திருந்த  பலவகையான பழங்களை   வாரி  உண்டான் . கரும்பை   விழுங்கினான் .   பச்சைக்   காய் கறிகளை   எடுத்து    உண்டான் . அரிசியையும்    வாய்   மடுத்து   உண்டான் .  இப்படி   அங்குள்ள  பண்டங்கள்   யாவற்றையும்   எடுத்து  எடுத்து வயிற்றுக்குள்   பெய்தும் அவனுடைய   பசி   அடங்கவில்லை . நெய்யை   ஆகுதி  செய்ய வேள்வித்   தீ ஓங்குவது   போலப் பசி  பின்னும்   மிகுதியாயிற்று.

   இதைக்   கண்டு  அதிசயமுற்ற   எம்பெருமாட்டி ,    தன்  கணவன்   முன்   சென்று   நாணத்துடன்   தலை   கவிழ்ந்து   நின்றாள். அவளைக்  கண்ட பெருமான்  ஒன்றும்  அறியாதவனைப்   போல்  , “    அவன் உண்டு   இன்னும் உணவு   மிஞ்சி   இருந்தால் , இன்னும் உள்ள  பூதங்களை   அனுப்புகிறேன் . ”   என்றான்

     அம்மை , “  சுவாமி,   இந்தக்   குட்டை  பூதம்  அங்கே   இருந்த   உணவு    முழுவதையும்   உண்டும்  அதன்   பசி  அடங்கின  பாடில்லை. இன்னும்  மற்றக்   கணங்களையும் விடுவீர்களானால்  இந்த  உலகம்   முழுதும்   விழுங்கி  விடுவார்கள். ”   என்று    சொல்லிக்   கொண்டிருக்கும்போது குண்டோதரன்  அங்கே   வந்தான் .                “ எம்பெருமானே , எம்பிராட்டி  சமைத்து   வைத்த  உணவையெல்லாம்   உண்டும்  இன்னும் என்  பசி  தீரவில்லையே !. பிறருக்கு   இட்டு   உண்ணாதவர்    வயிறு   போல   என்   வயிறு   எரிகிறதே !.  தேவரீர்   திரிபுரங்களுக்கு   இட்ட  தீயே    என்  வயிற்றுக்குள்   புகுந்ததோ  என்னவோ     தெரியவில்லையே  ?     என்று   கதறினான்