செவ்வாய், 23 மார்ச், 2021

 சிலேடைகள் அழகு

கரு டர்

திருப்பூரில் பேசப் ப்ோயிருந்தபோது திருப்பணி நடந்து கொண்டிருந்த பெருமாள் கோவிலுக்கு அன்பர்கள் அழைத்துச் சென்றார்கள். சுவர்கள் எழும்பியிருந்தன. மேல் தளம் போடவில்லை. 'ஏன் இன்னும் மேலே கட்ட வில்லை?” என்று கேட்டார் இவர். 'கருடர் கிடைக்க வில்லை' என்றார் அ ன் பர். இவர் கேட்ட கேள்வி: 'பெருமாளுக்குக் கருடர் கிடைக்கவில்லையா? ஆச்சரியந் தான்!” (கருடர்-உத்தரம், கருட பகவான்.)

பல்கலைக் கழகமும் டிகிரியும்

அத்துக்குடியில் இருபது நாள் கந்தபுராணச் சொற். பொழிவு ஆற்றினார். இவர் வ. உ. சி. கல்லூரிப்: பேராசிரியர் ஒருவர் திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்திருந்தார். அங்கெல்லாம் வெயில் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார் இவர்.

"திருச்சியைவிட மதுரையில் வெயில் அதிகம். இரண்டு

டிகிரி கூடவே இருக்கிறது.'

பல்கலைக் கழகம் இருக்கிறதல்லவா?"

(டிகிரி-வெப்ப அளவு, பட்டம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக