செவ்வாய், 23 மார்ச், 2021

 கலையாமகள்

தினமணி - கதிரில் அன்பர்கள் இவரைக் கேட்ட கேள்விகளுக்குரிய விடைகளை எழுதி வெளியிட்டார். ஓர் அன்பர், 'க ைல ம க ள் நேரில் பிரத்தியட்சமானால் அவளுடன் சிலேடையாகச் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டிருந்தார். இவர், கலையா மகளே, என்னிடம் கலையா மகளாய் இரு என்பேன்" என்றார். - . * .

(கலையாமகள்-கலை ஆம் மகள், கலையாத மகள்.)

இப்பொழுதே இடம்

திருவல்லிக்கேணியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு வலப்பக்கம் மணமகள் அமர்ந்திருந்தாள், ! பொரியிடும்போது புரோகிதர் பெண்ணை மணமகனுக்கு இடப்பக்கமாக வந்து அமரச் சொன்னார். அவள் அமர வாகாக மணமகன் சற்றே நகர்ந்தான். இவர், "இப்போதே இடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக