ஞாயிறு, 22 மார்ச், 2015

Dr U V Swaminatha Iyer stamp.jpg

. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக .வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் . வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். .வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.------ கி.வா.ஜ வின் குரு 
.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்கள்[5]

புத்தகத்தின் பெயர்         பதிப்பித்த ஆண்டு
நீலி இரட்டை மணிமாலை         1874
வேணுவனலிங்க விலாசச் சிறப்பு           1878
திருக்குடந்தைப் புராணம்           1883
மத்தியார்ச்சுன மான்மியம்        1885
சீவக சிந்தாமணி             1887
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது           1888
திருமயிலைத் திரிபந்தாதி          1888
பத்துப் பாட்டு மூலமும் உரையும்           1889
தண்டபாணி விருத்தம் 1891
சிலப்பதிகாரம்  1892
திருப்பெருந்துறைப் புராணம்    1892
புறநானூறு        1894
புறப்பொருள் வெண்பா மாலை                1895
புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம்          1898
மணிமேகலை  1898
மணிமேகலைக் கதைச் சுருக்கம்           1898
ஐங்குறு நூறு    1903
சீகாழிக் கோவை             1903
திருவாவடுதுறைக் கோவை      1903
வீரவனப் புராணம்           1903
சூரைமாநகர்ப் புராணம்                1904
திருக்காளத்தி நாதருலா              1904
திருப்பூவண நாதருலா 1904
பதிற்றுப் பத்து  1904
திருவாரூர்த் தியாகராச லீலை 1905
திருவாரூருலா                1905
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்        1906
தனியூர்ப் புராணம்          1907
தேவையுலா      1907
மண்ணிப்படிக்கரைப் புராணம்  1907
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்          1908
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு     1910
திருக்காளத்திப் புராணம்             1912
திருத்தணிகைத் திருவிருத்தம்                1914
பரிபாடல்            1918
உதயணன் சரித்திரச் சுருக்கம்  1924
பெருங்கதை      1924
நன்னூல் சங்கர நமச்சிவாயருரை          1925
நன்னூல் மயிலை நாதருரை     1925
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்        1928
தக்கயாகப் பரணி            1930
தமிழ்விடு தூது                1930
பத்துப் பாட்டு மூலம்     1931
மதுரைச் சொக்கநாதர் உலா      1931
கடம்பர் கோயிலுலா     1932
களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை          1932
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்  1932
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது         1932
பழனி பிள்ளைத் தமிழ் 1932
மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை      1932
வலிவல மும்மணிக் கோவை  1932
சங்கரலிங்க உலா           1933
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா                1933
பாசவதைப் பரணி           1933
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
விளத்தொட்டிப் புராணம்             1934
ஆற்றூர்ப் புராணம்         1935
உதயண குமார காவியம்            1935
கலைசைக் கோவை      1935
திரு இலஞ்சி முருகன் உலா     1935
பழமலைக் கோவை      1935
பழனி இரட்டைமணி மாலை    1935
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை          1936
கனம் கிருஷ்ணயைர்    1936
கோபால கிருஷ்ண பாரதியார்   1936
திருநீலகண்டனார் சரித்திரம்    1936
திருமயிலை யமக அந்தாதி       1936
திருவள்ளுவரும் திருக்குறளும்             1936
நான் கண்டதும் கேட்டதும்         1936
புதியதும் பழையதும்    1936
புறநானூறு மூலம்         1936
பெருங்கதை மூலம்       1936
மகாவைத்தியநாதையைர்          1936
மான் விடு தூது                1936
குறுந்தொகை   1937
சிராமலைக் கோவை     1937
தமிழ்நெறி விளக்கம்    1937
திருவாரூர்க் கோவை   1937
நல்லுரைக் கோவை பகுதி 1       1937
நல்லுரைக் கோவை பகுதி 2       1937
நினைவு மஞ்சரி - பகுதி 1            1937
அழகர் கிள்ளை விடு தூது          1938
சிவசிவ வெண்பா            1938
திருக்கழுக்குன்றத்துலா             1938
திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை            1938
திருமலையாண்டவர் குறவஞ்சி              1938
நல்லுரைக் கோவை பகுதி 3       1938
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு            1939
தணிகாசல புராணம்      1939
நல்லுரைக் கோவை பகுதி 4       1939
புகையிலை விடு தூது  1939
மகரநெடுங் குழைக்காதர் பாமாலை      1939
கபாலீசுவரர் பஞ்சரத்தினம்        1940
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா      1940
வில்லைப் புராணம்        1940
செவ்வைச் சூடுவார் பாகவதம்  1941
நினைவு மஞ்சரி - பகுதி 2            1942

வித்துவான் தியாகராச செட்டியார்          1942
திரு கி.வா.ஜ. அவர்களின்    குரு
மகாமகோபாத்தியாய  திரு உ.வே.சுவாமிநாதன்    அவர்கள்

சனி, 14 மார்ச், 2015


தி

திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்

36.       தேண்டியவர் நின்னருளி னால்இன்பம் ஆர்குவார்;

                    சிறியனேன் பெறக்கருதுவாய் ;

             சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்

                      சிங்கார வேல்முருகனே !



37 .       வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி

                      வியாகுல மனத்தினொடு
     
             விரைந்துசென் றேவள்ளி எம்பிராட் டிக்குமுனம்

                         வேசாறி ஏங்கிநின்று


38      . நீடுமுளம் உருகிப் பணிந்ததை நினைத்துன்றன்

                    நிகரிலாக் கருணைஎண்ணி

            நெகிழன்பர் தம்முடன் கூடிவழி பாடுசெய்

                        நியதியினை யருள்புரிகுவாய் !



39.           சாடுமலம் ஒருவிமெய்ஞ் ஞானநிலை யன்பினர்

                       தழைக்கச்செய் குமரகுருவே ,

               சங்கரன் பங்கதனில் ஒன்றிடும் புங்கவி

                           தனக்குரிய மாமதலையே ,


40.     தேடுவளம் யாவுமுற நீடுபலர் வாழ்வுபெறு

                    தெய்வநக ரென்னுமேன்மை

           சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்

                      சிங்கார வேல்முருகனே!








வாகீசகலாநிதி  திரு கி.வா.ஜகந்நாதனின் அனைத்து புத்தகங்களும் படித்து இன்புற  கீழே அழுத்தவும் .
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-92.htm 

நன்றி 


திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்






31.           பாய்மயிலின் ஏறிஅன் பர்க்குதவ வேகமாய்ப்

                           பரிந்துவரு            கருணைமுகிலே,

                பத்தர்செயும் அன்பினுக் கொருகோடி யளவன்பு

                            பண்ணும்அதி            சயவள்ளலே,


32.            சேய்மலி எழிற்குமரன் என்னிலஞ் சியமெனச்

                          செப்பிஉமை           கொஞ்சுமுருகா,

                 சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்

                             சிங்கார             வேல்முருகனே !


33.            ஆண்டவன் அருள்கிலன் , அந்தோ அவன்குருடன்,

                           அடியனேன்              குறைகண்டிலன்,

                ஆர்எனைத் தாங்குவார் என்றே குறைசொல்லும்

                            ஆதர் உண் மைஅறிகிலார் ;


34.            காண்டகைய தனுகரண புவனபோ கந்தந்து

                           காசினியில்                வாழவைத்த

                  கருணையினை எண்ணில்யாம் செய்கின்ற கைம்மாறு

                              கடுகளவு               தானுமுண்டோ?


35.            வேண்டிய வரம்தரற் கெஞ்ஞான்றும் நீயுளாய்;

                          மீதூர்ந்த            பத்திகொண்டு

                மெய்ம்மயிர் பொடிப்பவிழி நீரருவி காலமனம்

                       வெந்துருக             வேசாறியே





அன்பார்ந்த   தமிழ்  ஆர்வலர்களே ! திரு கி.வா.ஜகன்னாதன் அவர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வரியை அழுத்தி   இணைப்பிற்குச் செல்க !
நன்றி



வெள்ளி, 13 மார்ச், 2015

திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம் 


             26.  அற்புத   சுகச்சொருப   மானநின்     சோதியுரு 

                          அகத்தினில்           நிறுத்திஒன்றி 
                  ஆசைநிக   ளத்தினைப் பொடிபடப்  போக்கிஉள்  
                           அமைதிபெற்        றேசாந்தியில் 

          27.   நிற்பதற்  கென்ணினேன் ; எண்ணிய   படிக்கெனை 

                            நியமித்தல்             நின்கடன்காண் ;
                   நீதகுரு   நாதசுக    போதமறை  யோதவரு 
                             நின்மல             நிராலம்பமாம் 

          28.     சிற்பர,  சிகாவளம   திற்புவனி       முழுதுலவு 

                              சேவக               குமாரப்ரபோ,
                     சிங்காத    சீர்மயிலை   பொங்கார்வ   மோடுவளர் 
                               சிங்கார              வேல்முருகனே !

          29.     வாய்மைதவ  றாமலுனை  வாழ்த்தியே  யார்மாட்டும் 

                                மலியன்பி       னோடுபழகி 
                    மனத்தொரு  கலக்கமும்  இல்லாமல்  எப்பொழுதும் 
                                மன்னுதெளி     வோடுநின்று 

         30.     தூய்மையொடும்  உன்னை  வணங்கி உள் ளம்கொண்டு 

                               துன்பத்தொ         டின்பம்வந்தால் 
                    துளங்காமல்   யாவும்நின்  திருவருட்   செயலெனத் 
                                துணிந்துவா    ழச்செய்குவாய் ;




                  
                           

வியாழன், 12 மார்ச், 2015

              
                திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம் 


             
                 21.        ஞானமுறு  முனிவரர்   தமைக்குரு   எனக்கொண்டு 
                                           நன்னெறியி         லேசான்றவர் 
                               நண்ணுவார்;  முனிவரில்   சனகாதி      நால்வரை 
                                         நாயகமெய்ஞ்          ஞானியரென   

                 22.         வானவரம்   ஓதுவர்;  கல்விகேள்     விச்செல்வம் 
                                          மண்டும் அந்              நால்வருக்கு 
                                மாஞான  முத்திரை    காட்டியுப      தேசஞ்செய் 
                                          வள்ளல்தென்      முகக்கடவுளே 

                 23.          ஆனபெரு    மைக்குரிய   குரவனென்  றெல்லாரும் 
                                             அன்புசெய்          தேபணிகுவார்.;
                                  அத்தகைய   மோனகுரு    உபதேச    உரைகேட்க 
                                               அருள்செய்த    குருபரனெனாத் 

                 24.          தேனவிலு     மொழியினால் மேலோர்கள்  போற்றிசெய்       
                                             தேசிகனும்        நீயல்லையோ ?
                                 சிங்காத     சீர்மயிலை       பொங்கார்வ   மோடுவளர் 
                                              சிங்கார    வேல்முருகனே ! 
            
                25.           பற்பல    நலச்செய்கை    செய்வதற்    காசையென் 
                                             பால்உண்டு ;       சோம்பலதனால் 
                                பதிந்தொரு   திறத்தினிற்    சாதனம்           புரியும்அ ப் 
                                            பாங்கிலா          இழுதையேன்யான்;
                                 
                          
  

செவ்வாய், 10 மார்ச், 2015


                                     
        திருமயிலைச் சிங்கார வேலர்  பதிகம் 

      16.     தென்னைமலி   பைஞ்சோலை   கங்கைபுரை   பொய்கைஇவை 
                         சேர்ந்துவளம்                  எந்நாளுமே  
               சிங்காத      சீர்மயிலை    பொங்கார்வ           மோடுவளர் 
                           சிங்கார                    வேல்முருகனே!

     17.       தண்டமிழ்க்      கேபெருமை    நல்கும்    பொருள்துறை   
                           சார்அகத்                      திணையில்முன்னர்த் 
                தருகுறிஞ்    சித்திணையின்    மலர்நினக்    குரியதாம் ;
                            சால்குறிஞ்             சிக்கிழவனாய்  

       18.     அண்டும்நீ      வீரத்தின்   வகையினைச்        சொல்புறத் 
                            தாம்திணைக        ளின்முன்னதாய் 
                 ஆர்ந்தவெட்      சித்திணைக்    குரியபூ  வும்புனைந்
                              தப்புறப்              பொருள்தலைவனாய் 

      19.        மிண்டிய   பெரும்புகழ்    பெற்றனை ;   எனிற்றமிழின் 
                                மெய்த்தெய்வம்            நீஎன்பதில் 
                   வேறுபட்   டுச்சொல்ல  வகையுமுண்       டோ ?உனை 
                                  வேண்டிவந்     தேன்;அருளுவாய்;

        20.        திண்டிறல்கொள்   ஏராறு    தோளுடைய   சேவகா;
                                 திருஞான        சம்பந்தர்சொல் 
                      சிங்காத   சீர்மயிலை    பொங்கார்வ    மோடுவளர் 
                                  சிங்கார           வேல்முருகனே!

                 















திங்கள், 9 மார்ச், 2015

திருமயிலைச் சிங்கார வேலர் திருப்பதிகம் 

                   11.   நேருடைய  வலியின்மை  தாம்உணர்ந் துண்மை 
                                         நினைந்துபணி        வார்களென்றே 
                            நீயருளி   னாற்போரை  நீட்டித்த   னை ;ஈது 
                                          நித்தம்நினை     வுற்றுருகினேன் ;

                    12.    தேருடைய  நல்விழா   அன்னதா  னப்பெருமை 
                                            தேவாரம்         ஓதுதுழனி  
                              சிங்காத   சீர்மயிலை   பொங்கார்வ  மோடுவளர் 
                                              சிங்கார           வேல்முருகனே!

                     13.      நின்னுடைய   தந்தைமது  ரைத்தலத்   தேமுன்னர் 
                                              நேயமுறு        வழுதிகுறையை                                                                                     நீக்குதற்  கென்றகப்   பொருள்நூலை   நூற்பாக்கள் 
                                                நின்றமூ            விருபதுபெற 

                    14.        மன்னுவித்    தான் ;அதன்    இலக்கியமி    தாமென 
                                               மனங்கொளற்      காகநீயோ 
                                 வாய்களவி   னால்வள்ளி   யம்மையை  மணந்தனை ; 
                                               மகிழ்கற்பு    முறையினாலே 

                     15.        துன்னுமிந்   திரன்மகளை வேட்டனை;  செந்தமிழ்த் 
                                                தொன்னெறியின்    மாட்சிகாட்டிச் 
                                   சொற்சுவை  பொ ருட்சுவையை   ஆய்புலவர்  துதிசெயச் 
                                                 சுடரும்நின்           பெருமைஎன்னே!