வியாழன், 5 மார்ச், 2015

ஒரு சமயம் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகந்நா தன் அவர்கள் இலக்கிய உரை ஆற்ற வெளியூர் சென்றிருந்தார். அங்கு எப்பொழுதையும் விட மாதர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.ஓ  ! பெண்களுக்கு  இலக்கியத்தில் நா ட்டம் வர ஆரம்பித்து விட்டது போலும் ! என எண்ணி               உற் சாகமுற்றார் . அருகில் இருந்தவரிடம் ," எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்களுக்கு இலக்கியத்தில் இவ்வளவு நாட்டமா? மெச்சத்தகுந்ததுதான்!.  "  என்றார். மற்றவரோ ,   " ஐயா! இன்று நீங்கள் என்ன தலைப்பில் பேசப்போகிறீர்கள்? " எனக் கேட்டார். அதற்கு கி.வா.ஜ அவர்கள் ,        " ஏன்? நெடுநல்வாடை  பற்றிப் பேசப்போகிறேன், சந்தேகமாக இருந்தால் , பத்திரிகையைக் காண்பியுங்கள் ஒருமுறை பார்த்துவிடுகிறேன்." என்றார்.
பத்திரிகையைப்  பார்த்தவுடன்  திடுக்கிட்டார். கால் மாறியிருந்தது. தன்னுடைய சிலேடை நயத்துடன் , " ஓஹோ! கால் மாறியதால்வந்த வினைதான் இது ! " என்றார். அருகில் இருந்தவர் பெரியவர் சொல்வது தெரியாது விழித்தார் . " வடை யை  எவ்வளவு காலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என நினைத்துப்  பெண்கள் வந்திருப்பார்களோ! " என்று கூறி              ' நெடுநல் வாடை' தவறாக  ' நெடுநாள் வடை'  என்று அச்சிட்டிருப்பதைச்  சொல்லாமல் சொன்னார் . அருகிலிருந்தவர் வெட்கப்பட்டு ,  தான் ஆங்கிலத்தில் எழுதிய  செய்தியை அப்படியே தமிழில்  எழுதியதை மறைத்துவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !  (nedunalvadai)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக