புதன், 4 மார்ச், 2015

வரங்கொண்ட  உமை  முலைப்பால்   
மணங் கொண்ட   செவ்வாயும்                                                                                            
பரங் கொண்ட   களிமயிலும்   
பன்னிரண்டு     கண்மலரும்                                                                                         
 சிரங்கொண்ட     மறையிறைஞ்சும்
 சேவடியும்   செந்தூரன்                                                                                           
 கரங்கொண்ட வேலும் 
எந்தன்  கண்ணைவிட்டு     நீங்காவே ---                                                                                                                                                                               (செந்தில் கலம்பகம்)    

நவையேறும்   நெஞ்சினேன் 
நற்றமிழைக்   கற்றே                                                                              
அவையேற    வைத்தருளும்
அண்ணல்    ---- சுவையேறு                                                                             
செந்தமிழ்ப்   பன்னூல்   விளக்கும்
சீர்ச்   சாமிநாத  குரு                                                                                                               
 அந் தளிர்த்   தாள் 
 சென்னிக்கு   அணி      --------  ( கி. வா. ஜ  ) 
 எப்பொழுது மேடைப்பேச்சைத் துவங்கினாலும் , செந்தில் கலம்பகப் பாட்டைப் பாடி முருகனை நினைந்து  , பின் தான் இயற்றிய ‘ நவையேறும் ‘ என்ற பாடலைப் பாடி  , தன் ஆசான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களை நினைவுறுவதைக் கடமையாகக் கொண்டார் கி.வா.ஜ அவர்கள்.     முருகனும் தமிழும் இணைந்து தானே இருக்க வேண்டும் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக