செவ்வாய், 23 மார்ச், 2021

 கி.வா.ஜ சிலேடைகளின் அழகு


நடைப் பிசகு

ஒரு கோயிலுக்கு அன்பர்களுடன் புறப்பட்டார் இவர். "டாக்ஸியில் போவோம்; இல்லாவிட்டால் ரிக்ஷாவில்

போவோம்' என்றார்கள் அன்பர்கள். வேண்டாம் ; நடந்தே போகலாம்' என்றார் இவர். நாங்கள் நடப் போம். உங்களால் நடக்க முடியுமா?' என்று அன்பர்கள் கேட்டார்கள். உங்களுக்கு நடைப்பலம் உண்டு. எனக்கு நடைப்பலம் இல்லையா? நடைப்பிசகு எ ன் னி ட ம் இல்லையே!' என்று இவர் சொன்னவுடன் யாவருமே. நடக்கலானார்கள். - -

பழநண்பர்

புதியதாக ஊரிலிருந்து ஒரு ந ண் ப ர் இவரைப் பார்க்க வந்தார். நிறையப் பழங்களை வாங்கி வந்தார். நீங்கள் புதிய நண்பர். ஆனாலும் இவற்றைப் பார்க்கும் போது பழ நண்பர் என்று தோன்றுகிறது' என்றார் இவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக