வெள்ளி, 8 செப்டம்பர், 2017

என் புத்தகங்கள் –கி.வா.ஜ---பகுதி 2
பத்திரிகைகளை எல்லாம் சேர்ப்பேன். அப்போதெல்லாம் எந்தப் பத்திரிகைக் கார்ரும் மாதிரிப் பிரதி வேண்டுமென்றால் உடனே அனுப்பி விடுவார்கள்.அநேகமாக அந்தக் காலத்தில்  நடைபெற்ற பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியாவது என்னிடம் இருக்கும் . ஆனந்த போதினிக்கு நான் சந்தாதார்.புத்தகக் கம்பெனிகளுக்கெல்லா, கேட்லாக்குக்கு எழுதி வாங்கி வைத்துக் கொள்வேன்.அந்தக் காலத்தில் கார்டு காலணாத்தான் . நாள் தோறும் கடிதங்கள் எழுதுவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது தபால் வந்துகொண்டே இருக்க வேண்டும் ,.பத்திரிகையின் மாதிரிப் பிரதியோ  காட்லாக்கோ எதுவானாலும் சரி , வரவேண்டும் . தபால் நிலையத்துக்குப்போய் தபால் கட்டுகளை உடைக்கும்போதே உடனிருந்து தபால்களை வாங்கிக் கொள்வேன். அந்தக் காலத்தில் வி.பி.பியில் புத்தகங்களைத் தருவிப்பது எளிது.அதற்கென்று விசேஷச் செலவு கிடையாது. இப்போது வி.பி.பியில் தருவிப்பதென்றால் எத்தனை செலவு ! சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் ‘என்பது இந்தக் கால வி.பி…பி செலவுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான பழமொழி.
அப்படிப்  பல பத்திரிகைகளைப் படித்துப் படித்து நாமும் பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. தினப் பத்திரிகைகளுக்கு ஊர்ச் செய்திகளை எழுதினேன். ஒவ்வோர் ஊரின் பெயரையும் தலைப்பாக இட்டுக் கீழே செய்திகளை வெளியிட்டு வந்த காலம் அது. எங்கள் ஊராகிய மோகனூரைப்பற்றி எத்தனையோ செய்திகளை எழுதினேன். பிறகு கவிதை. தேசிய கீதங்கள் முத்லியவற்றை மாதப் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புனேன்.
            சென்னைக்கு வந்த பிறகு இலக்கியப் புத்தகங்களைச் சேகரிப்பதில்  ஆசை பிறந்தது. வாங்கி வாங்கிச் சேர்த்தேன் . ஒரே நூலில் நான்கைந்து பதிப்பு இருக்கும் . எல்லாவற்ற்றையும் வாங்கி வைப்பேன் . திவ்யப் ப்ரபந்தத்தைப் பல பேர் பதிப்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட 15 ரூபாய் கொடுத்து ஒரு புது பதிப்பை வாங்கியிருக்கிறேன் . எல்லாம் எப்போஹ்டும் பயன்படுமா? என்று கேட்கலாம். பெண் பிள்ளைகள் எத்தனை பாத்திரம் வாங்கிச் சேர்க்கிறார்கள்! எல்லாம் நாள்தோறுமா பயன்படுகின்றன?
            என்னுடைய ஆசிரியப் பெருமான் ஐயரவர்கள்  பெரிய புத்தகப் பித்தர்.பல நூல்களைத் தொகுத்தார்கள். படித்தார்கள். ஏட்டுச் சுவடியிலேயே படித்தவர்கள் அவர்கள்.எந்த நூலைப் படித்தாலும் அதில் அடையாளம் செய்து படிப்பவர்கள். அவர்களுக்கென்று சில சந்தேகங்க்ள் உண்டு. நல்ல பாடல்களாய் இருந்தால் அதன் பக்கத்தில்  ஒரு சுழி போட்டிருப்பார்கள். அத் பாடம் பண்ணத் தக்க பாட்டு என்றுபொருள். சில இடங்களில் ஒரு புள்ளி , இரண்டு புள்ளி , மூன்று புள்ளிகள் இருக்கும் . ஒரு புள்ளி இருந்தால் அந்த வரியில் சிந்திப்பதற்குரிய கருத்து ஒன்று இருக்கிறது என்று பொருள். மூன்று புள்ளிகள் இருந்தால் அங்கே மூன்று கருத்துகள் கவனிப்பதற்குரியவையாக இருக்கும் . சந்தேகமுள்ள இடங்களில்—என்று சிறு கோடிட்டிருப்பார்கள். அவை முக்கியமான பகுதிகள். சில இடங்களில் அடிக்கோடிட்டிருப்பார்கள்.படிக்கிறவர்கள் படித்து அடையாளம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அவர்கள் ஏதாவது நமக்கு அறிவிக்க வேண்டுமானால் “ அதோ அந்தப் புத்தகத்தை எடு ; வலப்பக்கத்தில் மேலே அடையாளம் செய்திருக்கிறேன். அதைப்படி” என்பார்கள். அங்கே நமக்கு வேண்டிய கருத்தோ , மேற்கோளோ கிடைக்கும் . அவர்கள் ஒன்று சொல்வதுண்டு ,” நான் இறந்தால் மறுபடியும் தமிழ் நாட்டில்தான் பிறப்பேன்.தமிழ் நூல்களைக் கற்பேன் ஆனால் நான் அடையாளம் இட்டு வைத்த இந்தப் புத்தகங்கள் எனக்குக் கிடைக்குமா? “ என்று வருந்துவார்கள். நாம் படித்துக் குறியிட்ட புத்தகமென்றல் அதற்குத் தனி மதிப்பு , புழங்கின பாத்திரம் மாதிரி.
அந்தப் ப்ழக்கத்தை   அவர்களிடம் நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன் . எதைப் படித்தாலும் அடியாளம் செய்து படிப்பேன் .பிழை இருந்தால் திருத்திக் கொண்டு படிப்பேன் .சில புத்தகங்களைப் பார்த்தால் ‘புரூப்’ திருத்துவதற்காக என்னிடம் யாரோ கொடுத்திருக்கிறார்கள்  என்று தோன்றும் . நான் என்ன செய்வது ? அப்படி ஒரு கெட்ட பழக்கம் .  எனக்கு உண்டாகிவிட்ட்து. பாரதியார் , சில நூல்களைப் படித்தால் சுவையில்லாத பாடல்களை அடித்து விடுவாராம் .அவருக்கு அத்தனை ராஜஸ குணம் .
            புத்தகங்களைப் படிக்கும்போது சிலபேர் அடையாளம் வைப்பதற்காகத் தாளின் மூலையை மடித்து விடுவதுண்டு. .அது நல்லதல்ல. பாராயண நூல்களில் ஒரு பட்டுக் கயிற்றை அடையாளம் வைப்பதற்காகவே சேர்த்துப் பைண்டு செய்திருப்பார்கள்.வேறு நூல்களிலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம். இருவரையில் படித்திருக்கிறோம் என்பதற்காக  எல்லாருமே ஏதாவது காகிதத்தை வைப்பதுண்டு.
            புத்தக அடையாளம் என்கிறபோது எனக்கு இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. நான் பல உரைகளும் அடங்கிய திருக்குறள் பதிப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன் . நள்ளிரவு , உறக்கம் வந்தது. புத்தகத்தை மூடிவிட்டுப் படுத்துக் கொண்டேன் . விடியற்காலை   எழுந்து மீண்டும் தொடர்ந்து படிக்கலாம் என்று எண்ணினேன். எங்கே விட்டேன் என்பதற்கு அடையாளம் வைக்கவில்லை. புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன் . அடையளம் இருந்த்து. தூக்க மயக்கத்தில் புத்தகத்தை மூடிய் போது இடையே ஒரு பூச்சி அக்ப்பட்டு இறந்து போயிருந்த்து.அதுதான் அடையாளம் ! நான் படித்துக் கொண்டிருந்த இடம் எது தெரியுமா? ‘கொல்லாமை’ என்னும் அதிகாரம் . அங்கேதான் இந்தக் கொலை நிகழ்ந்தது .
            ஒரு பையன் அடிக்கடி  என்னிடம் கதைப் புத்தகங்களை வாங்கிச் சென்று படித்து விட்டுக் குறித்த காலத்தில் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பான் . ஒருமுறை ஒருவாரம் தாமதமாக்க் கொண்டு வந்து கொடுத்தான் . “ ஏன் அப்பா இவ்வளவு தாமதம் ?” என்று கேட்டேன் . “ ஊரிலிருந்து என் தமக்கை வந்திருந்தாள். அவளும் படித்தாள். அதனால் தாமதம்” என்றான் . நான் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன் . அதைப் பிரித்துப் பார்த்தேன். அதில் தாழம்பூ அடையாளம் இருந்தது.  பூச்சி அடையாளம் இருந்ததைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது பூஅடையாளமோ , அடையாளத்துக்கு அடையளம் ; அதன் மணம் புத்தகத்தின் தாளில் ஏறியிருந்த்து.
            இதை நான் உவமையாக எடுத்துச் சொல்வதுண்டு . “ நம்முடைய குழந்தைக்ளுக்குப் பெயரை அடையாளமாக வைக்கிறோம் . எதையும் அடையாளமாக வைக்கலாம். ஆனால் நம் நாட்டில் இறைவன் பெயரை வைப்பது வழக்கம் . அது பூ அடையளம் போன்றது. குழந்தையை இனம் கண்டுகொள்ள அந்தப் பெயர் உதவுவதோடு இறைவனை நினைப்பூட்டிப் பக்தி மணமும்  உண்டாகச் செய்கிறது. “ என்பேன்
            நாம் படித்து அடையாளம் செய்த புத்தகம் என்றால் அதன்மேல் ஒரு தனி அபிமனம் ஏற்படுவது இயல்பு. பழகின் புத்தகம் என்பதற்க்க மட்டும் அல்ல. திடீர் என்று ஓர் இட்த்தை எடுக்க வேண்டுமென்றால் நாம் செய்திருக்கும் அடையாளத்தைக் கொண்டு சட்டென்று கண்டு பிடித்து விடலாம் .
                                                      (தொடரும் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக